அறிவோம் இஸ்லாம்..
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்.... இஸ்லாமிய கேள்வி பதில்கள்: 🌻1)ஸிஹாஹ் ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன? A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா 🌻2)அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி) 🌻3)அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்? A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா) ...