குர்ஆன் பற்றி அறிவோம்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்....

இஸ்லாமிய கேள்வி பதில்கள் குர்ஆன் பற்றியது:


🔴திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?


அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1...) கூற வேண்டும்.

🔴திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.



🔴 திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?


அல்லாஹ்விடமிருந்து இறங்கியது


🔴திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?


ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.


🔴 திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?


ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது

🔴திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்?

நபி (ஸல்) அவர்கள்

🔴திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?


ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது

🔴திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?

கி.பி.610ம் ஆண்டு

🔴திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?

ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)



🔴திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?


அரபி மொழியில் இறங்கியது.


🔴திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?


இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.


🔴 திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?


மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.


🔴திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?


நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.


🔴ஜூஸ்வு என்றால் என்ன?


பாகம் என்று பொருள்


🔴திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?


30பாகங்கள் உள்ளன.


🔴சூரா என்றால் என்ன?


அத்தியாயம் என்று பெயர்


🔴திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?


114 சூராக்கள் உள்ளன.

🔴திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?

சூரா ஃபாத்திஹா

🔴 ‘குர்ஆனின் தாய்’ என நபி (ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட சூரா எது?

அல்-பாத்திஹா

🔴அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?

நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி  (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனப் பெயரிட்டுள்ளார்கள்
(ஆதாரம் :புகாரி :4114)


🔴திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?

மதீனாவில்

🔴திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?

சூரா நஸ்ரு

🔴திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?

சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்


🔴 ஆயத் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்


🔴திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?


ஆயிஷா (ரலி) அவர்களின் கணக்குப்படி6666


🔴திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?


இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்


🔴திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?


சூறத்துல் பகராவில் உள்ள கடன் பற்றிய282வது வசனம் (யா அய்யுஹல்லதீன ஆமனூஇதா ததாயன்ந்ததும்;....)


🔴திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?


தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி


🔴ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?


பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால்


🔴சில சூராக்களில் ஆரம்பத்தில் (அலிஃப்,லாம், மீம்) போன்று துவங்கும் எழுத்துகளுக்கு என்ன பெயர் கூறப்படும்?


ஹூருஃபே முகத்த ஆத் என்று கூறப்படும்.


🔴ஹூருஃ பே முகத்த ஆத் எழுத்துக்கள் எத்தனை?


14 எழுத்துக்கள்


🔴திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தாக்கள் எத்தனை?


14 ஆகும்.

🔴திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.)

🔴திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள்உள்ளனவா?


இல்லை


🔴திருக்குர்ஆனில் 'சூரத்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது.?


7 இடங்களில்


🔴திருக்குர்ஆனில் 'குல்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது?


232 இடங்களில்


🔴திருக்குர்ஆனில் உள்ள ஜபர் (என்ற அகரம்) எத்தனை?


53,223 இடங்களில் வருகிறது


🔴திருக்குர்ஆனில் உள்ள ஜேர் (என்ற இகரம்);எத்தனை?


39,582 இடங்களில் வருகிறது


🔴திருக்குர்ஆனில் உள்ள பேஷ் (என்ற உகரம்;) எத்தனை?


8804 இடங்களில் வருகிறது


🔴திருக்குர்ஆனில் 'மத்து' என்ற நீட்டல் குறி எத்தனை?


1771 இடங்களில் வருகிறது


🔴திருக்குர்ஆனில் 'ஷத்து'என்ற அழுத்தல் எத்தனை?


1274 இடங்களில் வருகிறது


🔴திருக்குர்ஆனில் 'நுக்தா' (புள்ளி)க்கள் எத்தனை?


1,05,684 எழுத்துக்கள்


🔴திருக்குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?


114 உள்ளன


🔴திருக்குர்ஆனில் நன்மையை ஏவும் வசனங்கள் எத்தனை?


சுமார் 1000


🔴திருக்குர்ஆனில் தீமையை தடுக்கும் வசனங்கள் எத்தனை?


சுமார் 1000


🔴திருக்குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்கள் எத்தனை?


1000


🔴திருக்குர்ஆனில் வாக்குறுதி கூறும் வசனங்கள் எத்தனை?


1000


🔴திருக்குர்ஆனில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள்

எத்தனை?


1000


🔴திருக்குர்ஆனில் ஹலால் (ஆகுமாக்கப்பட்டவை) பற்றிய வசனங்கள் எத்தனை?


250


🔴திருக்குர் ஆனில் ஹராம் (ஆகாதவை) பற்றிய வசனங்கள் எத்தனை?


250


🔴திருக்குர்ஆனில் வரலாறு கூறும் வசனங்கள் எத்தனை?


1000


🔴 திருக்குர்ஆனில் துஆக்கள் (பிரார்த்தனை) அடங்கிய வசனங்கள் எத்தனை?


1000


🔴திருக்குர்ஆனில் மன்சூக் (சட்டம் மாற்றப்பட்டவை) வசனங்கள் எத்தனை?


66


🔴திருக்குர்ஆனில் தான, தர்மம் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது?


150 இடங்களில்



🔴திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.


2698 இடங்களில்


🔴திருக்குர்ஆனில் 'ரப்பு' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?

151 இடங்களில்

🔴திருக்குர்ஆனில் 'ரப்புல் ஆலமீன்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
 42 இடங்களில

🔴திருக்குர்ஆனில் 'ஜின்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது?

22 இடங்களில்

🔴திருக்குர்ஆனில் புள்ளியிட்ட எழுத்து இல்லாத வசனம் எது?

சூரா இக்லாஸின் 'அல்லாஹூஸ்ஸமது'என்ற வசனமாகும்.

🔴திருக்குர்ஆனில் அரபி எழுத்துக்கள் 29ம் வரும் வசனங்கள் எத்தனை?

சும்ம அன்ஸல்னா மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இரண்டு வசனங்கள் மட்டுமே

🔴திருக்குர்ஆனில் உள்ள நீண்ட வார்த்தை எது?

ஃபஅஸ்கைனாகுமூஹூ, வல்யஸ்தக்லி ஃபன்னஹூம்
11எழுத்துக்களை கொண்டவை.

🔴திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?

7 சூராக்களில் வருகிறது

🔴திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?

சூரா அல்பகரா

🔴திருக்குர்ஆனில் உள்ள சிறிய சூரா எது?

சூரத்துல் கவ்ஸர்

🔴திருக்குர்ஆனில் (சூரா ஆரம்பமின்றி) உள்ள சிறிய வசனம் எது?

அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தில் உள்ள'சும்ம நழர' என்றவசனம் 

🔴திருக்குர்ஆனில் உள்ள ஒரே வார்த்தைக் கொண்ட ஆயத்து எது?

முத்ஹாம்மதான்

🔴திருக்குர்ஆனில் முதல் சூரா எது? கடைசி எது?

முதல் சூரா ஃபாத்திஹா கடைசி சூரா நாஸ்

🔴திருக்குர்ஆனின் கடைசி 'ஸஜ்தா'எந்த சூராவில் உள்ளது?

சூரத்துல் 'அலக்' என்ற அத்தியாயத்தில் உள்ளது.

🔴திருக்குர்ஆனில் 'யா அய்யுஹன்ன பிய்யு'என்று எத்தனை இடங்களில் வருகிறது?

11 இடங்களில்

🔴திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?

துல் ஜலாலி வல் இக்ராம்

🔴திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?

ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது

🔴திருக்குர்ஆனில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?

ரமலான் மாதம்

🔴திருக்குர்ஆனில் 'ஸகர்' என்ற நரகத்தின் காவலாளிகள் எத்தனை பேர் என குர்ஆன்கூறுகிறது?.

19 பேர்

🔴திருக்குர்ஆன் கூறும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பின்வரும் சமுதாயத்திற்குஅத்தாட்சியாக உள்ள மனித உடல் எது?

ஃபிர்அவ்னின் உடல்

🔴திருக்குர்ஆன் கூறும் மூஸா நபியின் எதிரி யார்?

ஃ பிர்அவ்ன்

🔴திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?

ஃநம்ரூத்

🔴திருக்குர்ஆன் கூறும் ஈஸா நபியின் எதிரி யார்?

யூத சமுதாயம்

🔴திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?

25 நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.


🔴திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?

4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது

என்றும் கூறப்பட்டுள்ளது.

🔴நபி ஆதம் (அலை) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?

25 இடங்களில்

🔴திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் என்னென்ன பெயர்கள் மூலம்அழைக்கிறான்?

முஹம்மது, அஹ்மது, தாஹா, யாஸீன்,முஸ்ஸம்மில்,

முத்தஸ்ஸிர், அப்துல்லாஹ் ஆகிய 7பெயர்களில்

அழைக்கிறான்.

🔴 நபி (ஸல்) அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?

ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதி,ஸிராஜிம்-முனீர் உட்பட 27 பெயர்கள்


🔴திருக்குர்ஆனில் நபிமார்களின் பெயர்களைக் கொண்ட சூராக்கள் எத்தனை?

மொத்தம் 6 சூராக்கள்
யூனுஸ்
( அல்-குர்ஆன் 10வது அத்தியாயம்)
ஹூத்
( அல்-குர்ஆன் 11வது அத்தியாயம்)
யூசுப்
( அல்-குர்ஆன் 12வது அத்தியாயம்)
இப்ராஹீம்( அல்-குர்ஆன் 14வது அத்தியாயம் )
 நூஹ்( அல்-குர்ஆன் 71வது அத்தியாயம்)
 முஹம்மது (ஸல்)(அல்-குர்ஆன் 47வது அத்தியாயம்)



🔴திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?

1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)

🔴) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?.

முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது

🔴திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?

3ம் ஜூஸ் உவின் ஆரம்பத்தில் வருகிறது.

🔴திருக்குர்ஆன் ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?

யமாமா என்ற போரில் ஏறத்தாழ 70ஹாஃபிழ்கள் (குர்ஆனை
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)

🔴திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம்தெரிவித்தவர் யார்?

உமர் (ரலி)அவர்கள் (ஆதாரம் :புகாரி)

🔴திருக்குர்ஆனை ஒன்று சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்?

 ஹளரத்உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ

🔴திருக்குர்ஆனின் சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்


🔴திருக்குர்ஆன் முதன் முதலில் அச்சிடப்பட்டது எப்போது?

ஹிஜ்ரி 1113

வது ஆண்டில்

🔴திருக்குர்ஆன் எங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது?

ஜெர்மனில் ஹம்பர்க் நகரில்

🔴அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டது?


ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் முழு குர்ஆனையும் எழுத்து வடிவில் தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.


அவ்வப்போது அல்லாஹ் இறக்கியருளும் வஹியை நபி (ஸல்) அவர்கள் உடனே எழுதி வைத்துக் கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள். இவ்வாறு இறைச்செய்தியை எழுதுவதற்காக நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலித் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் ஸாபித் பின் கைஸ் (ரலி) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டவைகள் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்ப்பட்டிருந்தது. அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டு, அவர்கள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றினார்கள். (ஆதாரம் :  புகாரி)


🔴ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களால் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்ட முழு குர்ஆன், உஸ்மான் (ரலி) அவர்களால் தற்போதுள்ள அமைப்பில் தொகுக்ப்படும் வரையிலும் யார் யார் பொறுப்பில் இருந்தது?

முதலில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அது உமர் (ரலி) அவர்களின் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்களின் மகளும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) அவர்களிடத்திலும் இருந்தது.
பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹப்ஸா (ரலி) அவர்களிடத்தில் இருந்த அந்த மூலப்பிரதியிலிருந்து பல பிரதிகளைத் தொகுத்து உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள்.  அவற்றுல் ஒன்று தான் ரஷ்யாவின் தாஸ்கண்ட் நகரத்திலும் மற்றொன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலும் இருக்கும் அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


🔴எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?

உஸ்மான்; (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

🔴 கலிபா உஸ்மான்; அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?

ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.




🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இன்ஷா அல்லாஹ் ...
இறைவனின் உதவியோடு இனிவரும் நாட்களில்
இஸ்லாமிய அறிவை தேடிய பயணம் தொடரும்......

Comments

  1. 2 sajthaakalai konda surah edhu

    ReplyDelete
  2. Oru miga periya pavam ullathu.antha pavam ithu varai seiya pada villai.marumai varai athu seiyapadavum maatathu.athu enna paavam?

    ReplyDelete
    Replies
    1. Allah tan adiyaarhalukku aniyayam ilaippadu

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அல்லாஹ்வின் 27 பண்புகளை குறிப்பிடும் சூரா எது? ithedku yenekku vidai theriyavillai.unkelukku therinthal sollunkel bro

    ReplyDelete
  4. புனித அல்குர்ஆனில் உள்ள அத்தனை வசனங்களும் எத்தனை தடவைகள் இறங்கின?

    ReplyDelete
  5. குர்ஆனில் எத்தனை வரலாறுகள் கூறப்பட்டுள்ளன?

    ReplyDelete
  6. ஹிஜ்ரி கலண்டர் எப்போது ஆரம்பமானது?

    ReplyDelete
    Replies
    1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டுமுதல்

      Delete
  7. குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடத்தில் உள்ளது?

    ReplyDelete
  8. அல்லாஹ் என்ற வார்த்தை அல்குர்ஆனில் எந்த சூறாவில் அதிகமாக உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. ஸூரத்துல் முஜாதலா

      Delete
  9. Quranil munril oru paguthi yenru alaikkapadum surath name ennathu?

    ReplyDelete
  10. அல்குர்ஆன் மக்காவில் எத்தனை வருடம் இறங்கியது?

    ReplyDelete
  11. அல் குர்ஆனின் ஆயத்துக்களின் சிறப்பு பற்றி ஹதீஸ் புனைந்து உறைத்தவர் யார்?

    ReplyDelete
  12. குர்ஆனில் உள்ள மக்கி வசனங்கள் எத்தனை?

    ReplyDelete
  13. திருக்குர்ஆனில் அல்லாஹ் வின் 27 பண்புகள் பற்றி கூறும் சூரா எது

    ReplyDelete
  14. *'லைலத்துல் கத்ர்' என்ற வார்த்தை குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது???*

    ReplyDelete
  15. சூரா அத்தஹ்ர் இன் மறுபெயர் என்ன??

    ReplyDelete
  16. குர்ஆனின் நடு சொல் எது

    ReplyDelete
  17. அல் குர்ஆனில் குர்ஆன் என்று எத்தனை இடத்தில் வந்துள்ளது

    ReplyDelete
  18. அல்லாஹ் என்ற வார்த்தை அல்குர்ஆனில் எந்த சூறாவில் அதிகமாக வ௫கிறது

    ReplyDelete
  19. ரமழான் என்ற வார்த்தை அல்குர்ஆனில் எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது

    ReplyDelete
  20. அல்குர்ஆனில் சத்தியம் செய்து கூறப்பட்டுள்ள சூறாக்களின் எண்ணிக்கை எத்தனை

    ReplyDelete
  21. புனித ரமலான் மாதத்தை குறிப்பிடும் அல் குர்ஆன் வசனம் எது

    ReplyDelete
  22. முதலாவது சூரா அருளப்பட்ட நகரம் எது?

    ReplyDelete
  23. அல்லாஹ் உடைய பெயர் எல்லா வசனத்திலும் வரும் ஸுரா எது

    ReplyDelete
  24. அல்குர்ஆனில் தொழுகை பற்றி மட்டும் பேசப்படும் ஸுறா எது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இஸ்லாமிய கேள்வி பதில்கள்

இஸ்லாம் பற்றிய அடிப்படை கேள்விகள்..